பீகார் வாக்காளர் திருத்தம் தொடர்பான வழக்கில் ஆதார், குடும்ப அட்டை போன்றவற்றை குடியுரிமையாக ஏற்க முடியாது என்ற தேர்தல் ஆணையத்தின் கருத்தை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
பீகார் மாநிலத்தில் நடப்பாண்டு இறுதிக்குள் தேர்தல் நடக்க உள்ள நிலையில், மாநில வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்யும் பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது.
அப்போது கடந்த 2013-ம் ஆண்டு வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத வாக்காளர்கள், பிறப்புச் சான்றிதழ், கடவுச்சீட்டு நகல் போன்ற கூடுதல் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டுமென தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், வாக்காளர்களின் குடியுரிமை ஆவணமாக ஆதார், குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை ஆகியவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டுமென நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்தது.
இது தொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஆதார், குடும்ப அட்டை போன்றவற்றை குடியுரிமையாக ஏற்க முடியாது என்ற தேர்தல் ஆணையத்தின் கருத்தை ஏற்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்தது