சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பாக இந்தியாவுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார்.
இஸ்லாமாபாத்தில் நிகழ்ச்சியொன்றில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், தனது நாட்டிற்குச் சொந்தமான ஒரு சொட்டு தண்ணீரைக் கூட பறிக்க அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்துள்ளார்.
சிந்து நதி நீரை நிறுத்தினால் இந்தியாவுக்கு மீண்டும் ஒரு பாடம் கற்பிக்கப்படும் என்றும்,
பாகிஸ்தானின் தாக்குதல் சத்தம் இந்தியர்களின் காதுகளை பிடித்து கொண்டே இருக்க வேண்டியிருக்கும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.
மேலும், நீர் ஓட்டத்தைத் தடுக்கும் எந்தவொரு முயற்சியும் போர் நடவடிக்கையாகக் கருதப்படும் எனக்கூறிய ஷெபாஸ் ஷெரீப், பாகிஸ்தானின் ஒரு சொட்டு தண்ணீரை கூட இந்தியாவால் பறிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.