சர்வதேச ஒத்துழைப்பின் சக்தியை இந்தியா நம்புவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மும்பையில் 18 ஆவது சர்வதேச வானியல் மற்றும் வானியற்பியல் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், ஒலிம்பியாட் நிகழ்வை சாத்தியமாக்கிய ஹோமி பாபா அறிவியல் கல்வி மையம், டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்தார்.
உயர்ந்த இலக்குகளை அடைய பெரிய கனவு காணுங்கள் என்றும் அவர் கூறினார். இதுவரை நடந்த ஒலிம்பியாட் தொடர்களில் இதுவே மிகப்பெரியது என்பதை குறிப்பிட்ட பிரதமர் மோடி, 64 நாடுகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் போட்டியில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார்.