கிழக்கு உக்ரைனில் உள்ள யப்பூளுனிவ்கா நகரை கைப்பற்றியதாக ரஷ்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
உக்ரைன், ரஷ்யா இடையேயான போர் 3 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இரு நாடுகளும் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. இந்த போரை முடிவுக்கு கொண்டுவர பல நாடுகளும் முயற்சித்து வருகின்றன.
இந்நிலையில் கிழக்கு உக்ரைனில் உள்ள யப்பூளுனிவ்கா நகரை கைப்பற்றியதாக ரஷ்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. யப்பூளுனிவ்காவை கைப்பற்றியதாக அங்கு ராணுவ வீரர்கள் ரஷ்யா கொடியை உயர்த்தி காட்டும் வீடியோ காட்சிகளையும் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.