திமுக அரசின் அலட்சியத்தால் மின் விபத்துக்கள் ஏற்பட்டு அகால மரணங்கள் தொடர்வதை இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், சென்னை தாம்பரத்தில் கடைக்கு சென்ற அஸ்வின் என்ற இளைஞர் மின்சாரம் தாக்கி பலியானது வேதனையளிக்கிறது என தெரிவித்துள்ளார்.
கடந்த 4 ஆண்டுகளாக பராமரிப்பின்றி இருக்கும் மின் கம்பங்களால் உயிர் பலி அதிகரித்து வருகிறது என கூறியுள்ள நயினார் நாகேந்திரன், திமுக அரசின் அலட்சியத்தால் இதுபோன்ற அகால மரணங்கள் தொடர்வதை இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.
ஆகையால், தமிழகத்தில் பழுதடைந்துள்ள மின் கம்பங்கள் அனைத்தையும் உடனே சரி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ள நயினார் நாகேந்திரன், உயிரிழந்த அஸ்வினின் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க முதலமைச்சர் உத்தரவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.