வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அருகே உள்ள தொடக்கப் பள்ளி சேதமடைந்து காணப்படுவதால் அதனைச் சீரமைத்துத் தர வேண்டும் என அரசுக்கு மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
25 மாணவ மாணவிகள் பயின்று வரும் இந்த பள்ளியின் கட்டடத்தின் மேற்பூச்சு பெயர்ந்தும், பக்கவாட்டு சுவர் சேதமடைந்தும் காணப்படுகிறது.
ஆபத்தான நிலையில் இருக்கும் இந்த பள்ளிக்குக் குழந்தைகளை அனுப்ப அச்சமாக உள்ளதாகத் தெரிவித்த பெற்றோர், மழைக்காலம் வர இருப்பதால் பிள்ளைகளை வேறு பள்ளியில் சேர்க்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.