புதுச்சேரியில் இந்தியக் கடற்படை சார்பில் நடைபெற்ற இசைவிழாவை ஏராளமானோர் கண்டு களித்தனர்.
79வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் இந்தியக் கடற்படையின் பாண்ட் இசைக்குழு சார்பில் இசைவிழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாகத் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் தற்காப்பு இசை முதல் தேசபக்தி பாடல்கள் வரை பல்வேறு இசைத் தொகுப்புகள் இடம்பெற்றன.
இந்த நிகழ்வை ஏராளமானோர் கண்டு ரசித்த நிலையில், கப்பல் படைகளில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் இசைக்குழு கலைஞர்களுக்குத் துணைநிலை ஆளுநர் நினைவுப் பரிசுகளை வழங்கினார்.