AI செய்யவே முடியாத வேலைகளைப் பட்டியலிட்டு மைக்ரோசாஃப்ட் நிறுவனம் AI தொழில்நுட்பத்திற்கே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியால் செயற்கை நுண்ணறிவின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
AI-யின் அசாத்தியத்தால் பல முன்னணி நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றன. வளர்ந்து வரும் ஏஐ தொழில்நுட்ப பயன்பாட்டால் இளைஞர்களும் அச்சமடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் AI செய்யவே முடியாத வேலைகளைப் பட்டியலிட்டு மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, செவிலியர் பணி, தீயணைப்பு பணி, எலெக்ட்ரீசியன், கப்பல் பொறியாளர், கார்பெண்டர், டயர்களுக்கு பஞ்சர் போடுதல் உள்ளிட்ட பணிகளை ஒருபோதும் ஏஐ தொழில்நுட்பத்தால் செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சில வேலைகளில் கண்டிப்பாக மனிதர்களின் ஈடுபாடு கட்டாயம் தேவைப்படும் என்றும், அதை எக்காரணத்தைக் கொண்டும் A.I. தொழில்நுட்பத்திடம் முழுவதுமாக ஒப்படைத்து விட முடியாது எனவும் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.