2021 சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் 9 ஆயிரத்து 133 போலி வாக்காளர்கள் வாக்களித்துள்ளதாக பாஜக எம்பி அனுராக் தாக்கூர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக டெல்லியில் உள்ள பாஜக தேசிய தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், முதலமைச்சர் ஸ்டாலின் போட்டியிட்டு வென்ற கொளத்தூர் தொகுதியில் 19 ஆயிரத்து 476 வாக்குகள் சந்தேகத்திற்கு இடமானவை எனத் தெரிவித்தார்.
கொளத்தூரில் 9 ஆயிரத்து 133 வாக்குகள் போலி வாக்குகள் என்றும், ஒரே முகவரியில் 30 வாக்காளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டிய அனுராக் தாக்கூர், ஒரே வாக்குச்சாவடியில் ஒருவர் 3 முறை வாக்களித்திருப்பது தவறுதலாக நடந்ததா? அல்லது திட்டமிட்டு நடத்தப்பட்டதா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், போலி வாக்காளர்களைக் காக்கவே ஸ்டாலின், ராகுல்காந்தி, சோனியா காந்தி உள்ளிட்டோர் வாக்காளர் பட்டியல் திருத்தத்தை எதிர்ப்பதாகவும் விமர்சித்துள்ளார்.