அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்றத் தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உயர்நீதிமன்ற கிளை முடித்து வைத்தது.
தமிழகத்தில் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள அனைத்து கொடிக் கம்பங்களையும் அகற்றத் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
இதனை எதிர்த்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அதிமுக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் இந்த வழக்கில் இடையீட்டு மனுத் தாக்கல் செய்தன.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், விஜயகுமார், சௌந்தர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்றத் தடை விதிக்க கோரிய மனு முடித்து வைக்கப்பட்டது.
அண்மையில் இது தொடர்பான வழக்கில் தனி நீதிபதியின் உத்தரவில் தலையிட முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்ததை அடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது.