சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியின் 4வது சுற்றுக்கு கோ கோ காப், லூசியா ப்ரோனெட்டி, வர்வாரா கிராச்சேவா முன்னேறினர்.
அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடைபெற்று வரும் இந்த தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்றில் இத்தாலியின் லூசியா ப்ரோனெட்டி, ஜெலினா ஓஸ்டாபென்கோ லாட்வியாவை 1-6, 6-3, 6-4 என்ற கணக்கில் வீழ்த்தினார்.
மற்றொரு ஆட்டங்களில் செக் குடியரசின் கரோலினா முச்சோவா, ரஷ்ய வீராங்கனை வர்வாரா கிராச்சேவா உடன் மோதினார்.
இதில் கரோலினா 2-6, 4-6 என்ற கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். மற்றொரு ஆட்டத்தில் உக்ரைன் வீராங்களை டயானா யாஸ்ட்ரெம்ஸ்கா விலகியதால் அவரை எதிர்கொள்ளவிருந்த அமெரிக்காவின் கோகோ காப் 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.