பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் 202 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி, தொடரையும் வென்றுள்ளது.
மேற்கிந்தியத் தீவுகள் – பாகிஸ்தான் அணி மோதிய 3வது ஒரு நாள் போட்டியில் முதலில் ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 294 ரன்கள் அடித்தது.
தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 92 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதன்மூலம் 202 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி மேற்கிந்தியத் தீவுகள் அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 34 ஆண்டுகளுக்குப் பிறகு கைப்பற்றி மேற்கிந்தியத் தீவுகள் அணி அசத்தி உள்ளது.