ஜனநாயக உரிமையைப் பறிப்பது தான் திமுகவின் சமூக நீதியா? - நயினார் நாகேந்திரன் கேள்வி!
Aug 14, 2025, 06:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஜனநாயக உரிமையைப் பறிப்பது தான் திமுகவின் சமூக நீதியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

Web Desk by Web Desk
Aug 14, 2025, 03:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தூய்மைப் பணியாளர்களைத் துன்புறுத்தும் திமுக அரசுக்கு அழிவு நெருங்கிவிட்டது என்று  பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி சென்னையில் கடந்த 13 நாட்களாகப் போராடி வந்த தூய்மைப் பணியாளர்களை நேற்று இரவோடு இரவாக வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியுள்ள திமுக அரசின் அடக்குமுறை துளியும் மனிதாபிமானமற்றச் செயல். தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடிய ஒடுக்கப்பட்ட மக்களை, ஏதோ கொலைக் குற்றவாளிகள் போல அடித்துத் துன்புறுத்தி வெளியேற்றியுள்ள  திமுக அரசையும் அதன் ஏவல்துறையையும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

உயர்நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்த சில நிமிடங்களிலேயே நூற்றுக்கணக்கான காவல்துறையினரைப் போராட்டக் களத்தில் குவித்த திமுக அரசு, போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் மீது இத்தனை நாள் அடக்கி வைத்திருந்த கோபத்தையும் வன்மத்தையும் ஒருசேர கட்டவிழ்த்து விட்டுள்ளது.

வெறும் வீடியோ ஷூட்டுக்காக தூய்மைப் பணியாளர்களுடன் முதல்வர் தேநீர் அருந்தியதையும், உணவு உட்கொண்டதையும் ஏதோ இமாலய சாதனை போல பெருமை கொள்ளும் திமுகவினருக்கு அம்மக்கள் மீது மதிப்போ மரியாதையோ கொஞ்சம் கூட இல்லை என்பதைத் தான் இச்சம்பவம் நமக்கு உணர்த்துகிறது.

இரவு, பகல் பாராது போராடிய மக்களைச் சென்று சந்திக்க மனமில்லாத முதல்வர் ஸ்டாலின்
அவர்களுக்கு, திரைப்படக் குழுவினரை நேரில் சந்தித்து வாழ்த்து கூறுவதற்கு மட்டும் நேரமிருக்கிறது என்பது வெட்கக்கேடு. ஒருவேளை மனசாட்சியின் அடிப்படையில் முதல்வர் அம்மக்களை நேரில் சந்தித்துப் பேசியிருந்தால் இந்தப் பிரச்சினை எப்போதோ முடிவுக்கு வந்திருக்கும்.

தூய்மைப் பணியாளர்களும் இந்தளவிற்குத் துன்பப்பட்டிருக்க மாட்டார்கள். அதை விட்டுவிட்டு தங்கள் வாழ்வாதாரத்திற்காகப் போராடும் ஏழை எளிய மக்களை ஒடுக்கி அவர்களின் ஜனநாயக உரிமையைப் பறிப்பது தான் திமுகவின் சமூக நீதியா? ஆளும் அரசு எந்த மக்களைக் காயப்படுத்துகிறதோ, அதே மக்களின் கரங்களால் இந்த அராஜக ஆட்சிக்கு முடிவுரை எழுதப்படும் என்று நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

Tags: tn bjpநயினார் நாகேந்திரன் கேள்விIs DMK's social justice to take away democratic rights? - Nayinar Nagendran questionsDMKMK Stalin
ShareTweetSendShare
Previous Post

அல்பேனியா : கட்டுக்கடங்காமல் பற்றி எரியும் காட்டுத்தீ!

Next Post

பாகிஸ்தான் – நிலச்சரிவால் 7 தொழிலாளர்கள் உயிரிழப்பு!

Related News

விடுதலை வேள்வியை ஏற்றி வைத்த முதல் வீரர் பூலித்தேவர்!

இஸ்லாமிய படையெடுப்பை தடுத்த வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை!

முல்லைப் பெரியாறு அணைக்கு அடித்தளமிட்டவர் முத்து இருளப்ப பிள்ளை!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்!

விடுதலை போரின் விடிவெள்ளி தீரன் சின்னமலை!

புரட்சி மாவீரன் வாஞ்சிநாதன்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவின் முதல் ராணி வேலு நாச்சியார்!

இந்திய பத்திரிகைத் துறையின் தந்தை!

சுதந்திரத்தின் அடையாளம் மாவீரன் அழகுமுத்துக்கோன்!

இந்தியா Vs பாகிஸ்தான் : வீறுநடை போடும் இந்தியா – வீழ்ந்து கிடக்கும் பாகிஸ்தான்!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

ரூ.60 கோடி மோசடி – நடிகை ஷில்பா ஷெட்டி, கணவர் ராஜ்குந்தா மீது வழக்கு!

பாகிஸ்தானில் சுதந்திர தின கொண்டாட்டத்தில் துப்பாக்கிச்சூடு – 3 பேர் பலி!

இல்லம் தோறும் மூவர்ணக் கொடி யாத்திரையை தொடங்கி வைத்த எல்.முருகன்!

சமூக நீதி பற்றி பேச திமுக அரசுக்கு துளியும் அருகதை இல்லை – எல்.முருகன்

ராமநாதபுரம் : பொது வழி பாதை ஆக்கிரமிப்பு – நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies