பாரதத்தின் விடுதலைக்காக இன்னுயிரைத் தியாகம் செய்த புரட்சி மாவீரர்களில் ஒருவர் தான் வாஞ்சி நாதன். அவரின் தேசப்பற்று மற்றும் தியாகத்தைப் பற்றி ஒரு செய்தி தொகுப்பு.
1886ம் ஆண்டு செங்கோட்டையில் பிறந்த சங்கரன் என்ற வாஞ்சி நாதன், திருவனந்தபுரத்தில் இளங்கலை பட்டம் பெற்ற பின் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் அரசுப் பணியில் இருந்தார்.
சிறுவயதில் இருந்தே சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வரலாற்றைக் கேட்டுக் கேட்டு, வணிகம் செய்ய வந்த ஆங்கிலேயர் நாட்டை ஆள்வதா? எனக் கொதித்தெழுந்தார்.
தேசத் துரோக வழக்கில், வ.உ.சி, சுப்பிரமணிய சிவா மற்றும் பத்பநாம ஐயர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். வ.உ.சிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப் பட்டது.
வ.வே.சு. ஐயரும், தேச பக்த இளைஞர்களும், வ.உ.சிக்கு கொடுமை இழைத்த ஆஷ் துரையைக் கொலை செய்வதென முடிவு செய்தனர்.
ஜூன், 17, 1911ம் ஆண்டு, ஜூன் 17 ஆம் தேதி, தம் குழந்தைகளைக் காண, கொடைக்கானலுக்குச் செல்ல ஆஷ் துரை தமது மனைவியுடன் புறப்பட்டார். தூத்துக்குடியில் இருந்து கொடைக்கானலுக்கு நேரடியாகச் செல்ல ரயில் வசதி கிடையாது என்பதால் மணியாச்சி வந்து தான் மாற்று ரயிலில் செல்ல வேண்டும்.
மன தைரியத்துடன், முதல் வகுப்பு பெட்டிக்குள் சென்ற வாஞ்சி நாதன், துப்பாக்கியால் ஆஷ் துரையை நேருக்குநேர் நெஞ்சில் சுட்டுக் கொன்றர். பிறகு,ரயில் நிலையத்தில் இருந்த கழிவறைக்குள் சென்று வாஞ்சி நாதன் தன்னை தானே சுட்டுக் கொண்டு வீரமரணம் அடைந்தார்.