சுதந்திர தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
79வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில் நாடு முழுவதும் பாதுகாப்பு பணிகளும், கண்காணிப்பு பணிகளும் பலப்படுத்தப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களை தடுக்கும் நடவடிக்கையாக திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறை, பகவதியம்மன் கோவில், காந்தி மண்டபம் உள்ளிட்ட இடங்களில் ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ரயில் மூலம் வரும் பயணிகளின் உடமைகளும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.