நாட்டின் 79-வது சுதந்திர தினத்தையொட்டி, ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தேசியக் கொடி ஏற்றினார்.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள பிபண்ணா சஹாயத சமிதியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இதில், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கலந்து கொண்டு, மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார்.
பின்னர் பேசிய அவர், இந்தியா ஒரு தனித்துவமான நாடு என்றும், உலகிற்கு அமைதியையும் மகிழ்ச்சியையும் கொண்டு வர இந்தியா முயற்சிப்பதாகவும் தெரிவித்தார். நாட்டில் உள்ள அனைவரும் மகிழ்ச்சி, தைரியம், பாதுகாப்பு, அமைதி மற்றும் மரியாதையை அடைய வேண்டும் என்பதற்காகவே நாம் சுதந்திரம் பெற்றோம் என்று அவர் குறிப்பிட்டார்.
உலகம் இன்று தடுமாறி வருவதாக கூறிய மோகன் பகவத், உலகிற்கு தீர்வுகளை வழங்குவதும், நமது தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில் மகிழ்ச்சி மற்றும் அமைதி நிறைந்த புதிய உலகத்தை உருவாக்குவதும் நமது கடமை என்றும் அறிவுறுத்தினார்.