சின்சினாட்டி டென்னிஸ் போட்டியின் அரையிறுதி சுற்றுக்குச் சின்னர், அட்மேன் முன்னேறி உள்ளனர்.
அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடைபெற்று வரும் இத்தொடரின் ஆடவர் ஒற்றையர் காலிறுதி போட்டியில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னர், கனடாவின் பெலிக்ஸ் ஆகருடன் மோதினார்.
அதிரடியாக விளையாடிய சின்னர் 6-0, 6-2 என்ற செட்கணக்கில் எளிதில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் பிரெஞ்சு வீரர் டெரன்ஸ் அட்மேன், டென்மார்கின் ஹோல்கர் ரூனேவுடன் மோதினார். இதில் 6-2, 6-3 என்ற செட்கணக்கில் அட்மேன் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.