ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் 79-வது சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்திய காலிஸ்தான் ஆதரவாளர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்ட காலிஸ்தான் ஆதரவாளர்கள், கனடா உள்ளிட்ட நாடுகளில் பதுங்கிக் கொண்டு அவ்வப்போது இந்திய இறையாண்மைக்கு எதிரான செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
காலிஸ்தான் ஆதரவு நிலைப்பாடு காரணமாக, கனடா உடனான உறவில் விரிசல் ஏற்படும் சூழல் கூட ஏற்பட்டுள்ளது. நிலைமை இவ்வாறு இருக்க, ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள இந்தியத் தூதரகம் முன்பு சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக அத்துமீறி நுழைந்த காலிஸ்தான் ஆதரவாளர்கள் கலகத்தை ஏற்படுத்தினர்.
காலிஸ்தான் ஆதரவு நிலைப்பாடுடைய நாடுகளை எப்போதும் எதிர்த்து வரும் இந்தியா, தற்போது இந்த விவகாரத்தை எவ்வாறு கையாளப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.