இந்தியாவின் குரலுக்கு உலக நாடுகள் செவிசாய்க்கின்றன என்றால், அதற்கு விண்வெளி துறையில் நாம் படைத்திருக்கும் சாதனையும் ஒரு காரணம் என்பதை ஒருபோதும் மறுக்கமுடியாது.
அந்த வகையில், 2035-ம் ஆண்டுக்குள் விண்வெளி மையத்தை அமைத்துவிட வேண்டும் என்ற அசாத்திய இலக்கை முன்வைத்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ பயணித்து வருகிறது.
சுதந்திர தினத்தை ஒட்டி விண்வெளித்துறையின் அடுத்தகட்ட இலக்குகள் குறித்துப் பேசிய இஸ்ரோ தலைவர் வி.நாராயணன், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் பணியில் இஸ்ரோ தீவிரமாக ஈடுபட்டுள்ளது என்றும், 2027 -ல் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணையும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
சந்திரயான்-4, சந்திரயான்-5 என அடுத்தடுத்த திட்டங்கள் இந்தியா கைவசம் உள்ளதாகவும் அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.