புதுச்சேரி வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் ஆலய தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
புதுச்சேரி வீராம்பட்டினத்தில் உள்ள செங்கழுநீர் அம்மன் ஆலயத்தின் ஆடி மாத திருவிழா கடந்த 7-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத்தை, அம்மாநில துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் தொடங்கி வைத்து சாமி தரிசனம் செய்தனர்.
இதில் புதுச்சேரியை ஒட்டியுள்ள தமிழகப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்து செங்கழுநீர் அம்மனை வழிபட்டுச் சென்றனர். தேரோட்டத்தையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியிலும் ஈடுபட்டனர்.