இந்தியாவிடம் வாலாட்டி அவ்வப்போது வாங்கிக் கட்டிக்கொள்ளும் பாகிஸ்தான், ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பின் கப்சீப் என வாயை மூடிக்கொண்டு, தான் உண்டு தன் வேலை உண்டு என இருக்கிறது.
காரணம், பஹல்காம் தாக்குதலால் ஆத்திரமடைந்த இந்தியா, தயவு செய்து போரை நிறுத்துங்கள் எனப் பாகிஸ்தான் கெஞ்சும் அளவுக்குப் பதிலடி கொடுத்தது.
முந்தைய காலங்களில் பாதுகாப்பு தளவாடங்களுக்காக வல்லரசு நாடுகளை நம்பியிருந்த இந்தியா, கடந்த 10 ஆண்டுகளாக எவ்வாறு பலம் பெற்றுள்ளது என்பதை அறியாமல் மூக்கை நுழைத்த பாகிஸ்தான், பின்னர் தலைதெறிக்க ஓட்டம் பிடித்தது.
பாகிஸ்தான் போர் விமானங்கள், ட்ரோன்கள் எதுவும் இந்திய வான் எல்லையில் நுழைய முடியாது என்பதை, தனது வான் பாதுகாப்பு தளவாடங்கள் மூலம் இந்தியா நெத்தியடி பதிலாக தெரிவித்தது.
இதனிடையே, ஆப்ரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தான் ட்ரோன்கள் எவ்வாறு வீழ்த்தப்பட்டன என்ற செயல்முறை விளக்கத்தை இந்திய ராணுவம் வீடியோவாக வெளியிட்டுள்ளது.