சிறுநீரகத் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தொடர்பாக மண்ணச்சநல்லூர் எம்எல்ஏ கதிரவன் அலுவலகத்தை முற்றுகையிட்டு, பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர்களின் வறுமையை பயன்படுத்தி, கிட்னி திருட்டு நடைபெற்றதாகத் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மீது பலர் புகார் தெரிவித்த வீடியோ வெளியானது.
கடந்த சில நாட்களுக்கு முன், எப்போது பணம் குறைவாக இருக்கிறதோ அப்போது கிட்னியை எடுத்து விடுவோம் வாங்க என்று தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக நிறுவனரின் மகனும், எம்எல்ஏவுமான கதிரவன் கூறியிருந்தார்.
இந்த நிலையில், கிட்னி திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட எம்எல்ஏ கதிரவனை பதவி விலக வலியுறுத்தி திருச்சி புறநகர் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
எம்எல்ஏ அலுவலகத்தை முற்றுகையிட்ட பாஜகவினர் எம்எல்ஏ கதிரவன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அப்போது, பாஜகவினரை போலீசார் கைது செய்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.