வாஷிங்டனின் மிக மோசமான குற்றவாளி யார் என்று பயனர் எழுப்பிய கேள்விக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தான் என எக்ஸ் வலைதளம் பதில் கொடுத்தது புயலை கிளப்பியுள்ளது.
எக்ஸ் தளத்தின் செயற்கை நுண்ணறிவு அம்சத்திடம் பயனர் ஒருவர் விளையாட்டாகக் கேள்வி எழுப்ப, சிறிதும் யோசிக்காமல் ட்ரம்பின் பெயரை குறிப்பிட்டுள்ளது.
30 ஆண்டுக் கால தரவுகளை தேடி பார்த்து இந்த பதிலை வழங்குவதாக எக்ஸ் தளம் கூறியது, தற்போது அந்த நாட்டில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
2025 ஜனவரி வரையில், ட்ரம்ப் தான் 34 குற்றங்களில் குற்றவாளி எனவும் பதில் வழங்கப்பட்டிருப்பது எலான் மஸ்க் – ட்ரம்ப் இடையேயான இடைவெளி மேலும் அதிகரித்திருப்பதையே சுட்டிக்காட்டுகிறது.
அமெரிக்காவில் குற்றச் செயல்கள் அதிகரித்திருப்பதாக ட்ரம்ப் சமீபத்தில் கவலை தெரிவித்த நிலையில், அவரையே குற்றவாளி என எக்ஸ் தளம் கூறியிருப்பது சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்சாக பகிரப்பட்டு வருகிறது.