சத்தீஸ்கரில் சுதந்திரத்திற்குப் பிறகு முதல் முறையாக நக்சல்களால் பாதிப்புக்குள்ளான 29 கிராமங்களில் மூவர்ணக் கொடிகள் ஏற்றப்பட்டுள்ளன.
நக்சல் பாதிப்பு அதிகம் உள்ள சத்தீஸ்கர் மாநிலத்தில் மத்திய அரசின் நடவடிக்கைகளால் நக்சல் பயங்கரவாதம் குறைந்து வருகிறது.
இந்நிலையில் சத்தீஸ்கரில் நக்சல் பாதிப்புக்குள்ளான நாராயண்பூர் மாவட்டத்தில் ஹொரடி, கர்பா, கச்பால், கோட்லியார், குட்டூல், படேமகோடி, பத்மகோட், கந்துல்னார், நெலங்கூர், பங்கூர், ரெய்னார் உள்ளிட்ட 29 கிராமங்களில் சுதந்திர தினத்தை ஒட்டி தேசியக் கொடி ஏற்றப்பட்டது.