சுதந்திர தினத்தை ஒட்டி குடியரசுத் தலைவர் மாளிகையில் தேநீர் விருந்து அளிக்கப்பட்டது.
ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் பாரம்பரியமாக நடத்தப்படும் தேநீர் விருந்து வரவேற்பு நிகழ்ச்சி ஒரு தனித்துவமான கலாசார பாங்கைக் கொண்டிருக்கும்.
அந்தவகையில், இந்த ஆண்டும் சுதந்திர தினத்தையொட்டி குடியரசுத் தலைவர் மாளிகையில் தேநீர் விருந்து அளிக்கப்பட்டது. இதில், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.