நெல்லையில் இஸ்கான் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
சர்வதேச கிருஷ்ண பக்தி இயக்கமான இஸ்கான் சார்பில் கிருஷ்ணர் அவதரித்த தினத்தைக் கொண்டாடும் வகையில் நெல்லையில் பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இதையொட்டி இஸ்கான் கோயிலில் ஸ்ரீகிருஷ்ணருக்குச் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் தங்கள் வீடுகளிலிருந்து கலசங்கள் எடுத்து வந்து, அவற்றை வைத்து வழிபாடு செய்து, பின்னர் அந்த கலச நீரைக் கிருஷ்ணரின் பாதங்களில் ஊற்றி அபிஷேகம் செய்தனர்.
தொடர்ந்து பல்வேறு மலர்கள் மற்றும் ஆபரணங்களால் கிருஷ்ணருக்குச் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
இதையடுத்து நடைபெற்ற குழந்தைகளுக்கான வேடமணிதல் போட்டியில் சிறுவர், சிறுமியர், ராதை, கிருஷ்ணர், கோபியர்கள் மற்றும் கோபாலகிருஷ்ணர் வேடமணிந்து கலந்து கொண்டனர்.