பாகிஸ்தான் மற்றும் அதன் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பல பகுதிகளில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாகக் கடந்த 24 மணி நேரத்தில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் கில்கிட்-பால்டிஸ்தானில் திடீர் வெள்ளத்தால் ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்ததுடன், பள்ளிகள், மருத்துவமனைகள் சேதமடைந்தன.
பஞ்ச்கோரா, ஜீலம் உள்ளிட்ட ஆறுகளில், அபாய அளவை தாண்டி வெள்ளம் பாய்ந்தோடுவதால் ஊருக்குள் மழைநீர் பெருக்கெடுத்து, வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன.