அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நேராக நடக்க முடியாமல் தடுமாறிய சம்பவம், அவருக்கு உடல் நலக்கோளாறு ஏற்பட்டுள்ளதோ என்ற விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
அலாஸ்கா வந்த ரஷ்யா அதிபர் புதினை வரவேற்க சென்ற ட்ரம்ப், ரெட் கார்ப்பட்டில் நடந்தபோது நேராக நடக்காமல் வளைந்த வளைந்து நடந்து சென்றார்.
இதுதொடர்பான வீடியோ தான் தற்போது சமூக வலைத்தளங்களில் விவாதப்பொருளாக மாறியுள்ளது. முன்னாள் அதிபர் பைடனுக்கும் இதே போன்ற பிரச்சனை இருப்பதாகச் சிலர் தெரிவிக்க, இல்லை இல்லை.
அதிபர் ட்ரம்ப் மதுபானத்திற்கு அடிமையானதன் விளைவு தான் இது என நெட்டிசன் ஒருவர் ஒரே போடாய் போட்டுள்ளார். எது எப்படியோ 79 வயதான அதிபர் ட்ரம்ப் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்றே, நெட்டிசன்கள் பெரும்பாலும் பதிவிட்டுள்ளனர்.