நாமக்கல்லில் தனியார் மருத்துவமனையில் பெயிண்ட் அடிக்கும்போது கிரேன் சரிந்து விழுந்ததில், மின்சாரம் தாக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நாமக்கல் – திருச்சி சாலையில் நாகராஜபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கட்டடத்தில் பெயிண்ட் அடிக்கும் பணியில் எருமபட்டியைச் சேர்ந்த சுகுமார், ஜோதி, முகேஷ் கண்ணன் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.
மருத்துவமனையின் 4வது மாடியில் கிரேன் மூலம் 3 தொழிலாளர்களும் பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டபோது எதிர்பாராத விதமாக கிரேன் சரிந்து மின்கம்பி மீது விழுந்து விபத்துக்குள்ளானது.
இதில், மின்சாரம் தாக்கி சுகுமார், ஜோதி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், முகேஷ் கண்ணன் படுகாயமடைந்தார்.
இந்நிலையில், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முகேஷ் கண்ணன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.