ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்திக்காட்டினால், அமெரிக்க அதிபர் டொனார்டு ட்ரம்ப்பை அமைதிக்கான நோபல் பரிசு பெற தகுதியானவர் எனப் பரிந்துரைப்பேன் என்று ஹிலாரி கிளிண்டன் தெரிவித்திருக்கிறார்.
3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் ரஷ்யா – உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போர் முடிவுக்கே வராமல் உள்ளது. இதனால் இருநாட்டு மக்களுமே பேரிழப்பைச் சந்தித்து வரும் நிலையில், சர்வதேச பொருளாதாரத்திலும் அதன் பாதிப்பு பிரதிபலிக்கிறது.
போரை நிறுத்த அவ்வப்போது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மேற்கொள்ளும் நடவடிக்கைகளும் தோல்வியில் மட்டுமே முடிகிறது. இந்நிலையில், அமெரிக்காவின் அலாஸ்கா நகரில் ட்ரம்பும், புதினும் சந்தித்துப் பேசினர்.
இவர்களது சந்திப்பு நிகழ்வு நடப்பதற்கு முன்பாக போட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஹிலாரி கிளிண்டன், போரை நிறுத்துவதில் கில்லாடி என மார்த்தட்டி கொள்ளும் ட்ரம்ப், ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்திக் காண்பித்தால், அவரை அமைதிக்கான நோபல் பரிசு பெறத் தகுதியானவராகப் பரிந்துரைப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.
அரசியலில் நேர் எதிரியான ட்ரம்ப் குறித்து ஹிலாரி தெரிவித்த இந்த கருத்து அந்நாட்டில் பேசுபொருளாகி உள்ளது.