ஜம்மு – காஷ்மீரின் கிஷ்துவார் மாவட்டத்தில் மேகவெடிப்பால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கிக் காயமடைந்தவர்களை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
ஜம்மு அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனைக்குச் சென்று காயமடைந்தவர்களின் உடல்நலம் குறித்து அவர் விசாரித்தார். இதன் பின் பேட்டியளித்த அவர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவம், விமானப்படை, காவல்துறை, உள்ளூர் நிர்வாகம் இணைந்து செய்த சேவைகள் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் முன்மாதிரியானவை எனத் தெரிவித்தார்.