நடிகர் வடிவேலுவின் நாச்சியப்பன் பாத்திரக்கடை காமெடியை அனைவரும் அறிந்திருப்போம்… அதற்கு இணையான ஒரு காமெடியை தான் நடத்தியிருக்கிறார் பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி ஆசிம் முனீர் .
அதாவது, வீர தீர செயலுக்கான பாகிஸ்தான் நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய விருதை தனக்கு தானே அறிவித்துக் கொண்டிருக்கிறார் ஆசிம் முனீர்.
ஆனால், பாகிஸ்தான் மக்கள் இதனை வீர தீர செயலாக பார்க்கவில்லை…. மாறாகக் கேலிக்கூத்தாகவே பார்க்கத் தொடங்கியுள்ளனர்.
குறிப்பாக, சமூக வலைத்தளங்களில் ஆசிம் முனீரை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். தனக்கு தானே விருது கொடுத்துக்கொள்ளும் நபருக்கு, நோபல் பரிசெல்லாம் எம்மாத்திரம்? என நெட்டிசன் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். மற்றொருவரோ, போரில் தோற்பதற்கெல்லாம் எதற்கு விருது? ஓ போரில் கூட ஆறுதல் பரிசு வழங்கப்படுமா என நக்கலாகப் பதிவிட்டுள்ளார்.
பாகிஸ்தான் முழுவதும் ராணுவ கட்டுப்பாட்டில் வந்துள்ளதாகச் சந்தேகம் எழுந்துள்ள நிலையில், ஆசிம் முனீரின் இந்த செயல் அதனை உறுதிப்படுத்துவதாகவே அமைந்துள்ளது.