கோவை இஸ்கானில் ஹரே கிருஷ்ணா முழக்கத்துடன் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
கோவை இஸ்கானில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, ஸ்ரீ ராதாகிருஷ்ணர் உள்ளிட்டோரின் விக்கிரகங்களுக்குச் சிறப்பு அலங்காரங்கள் நடைபெற்றன.
அதனைத் தொடர்ந்து கிருஷ்ணர் – ராதை வேடமணிந்து குழந்தைகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள், நாடகங்கள் உள்ளிட்டவையும் நடைபெற்றன.
இதனை பல்வேறு ஊர்களிலிருந்தும் வருகை தந்திருந்த பக்தர்கள் கண்டுகளித்தனர். பின்னர் ஹரே கிருஷ்ணா, ஹரே கிருஷ்ணா என்ற பக்தி கோஷத்துடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து கிருஷ்ண ஜெயந்தியைக் கொண்டாடினர்.