திமுக கட்சி மற்றும் அதன் கொள்கை சார்ந்தவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்ட பெரியார் விருதுகளை திரும்ப பெற உத்தரவிடக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமூக நீதி கிடைக்க பாடுபட்ட நபர்களை சிறப்பிக்கும் பொருட்டு, கடந்த 1995-ஆம் ஆண்டு முதல் பெரியார் விருது தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், விருதுக்கு தேர்வு செய்வது தொடர்பான நடைமுறைகளை பின்பற்றாமல், கடந்த 2022-ஆம் ஆண்டு முதல், ஆளும் அரசின் கட்சி மற்றும் திராவிடர் கழகத்தில் உள்ள நபர்கள் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டதாகவும், விருது வழங்குவதில் மாநில அரசின் செயல்பாடு நியாயமான முறையில் இல்லாததால் விருதை திரும்ப பெற்று தகுதியான நபர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர் ஸ்ரீதர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த மனு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை தள்ளிவைத்தார்.