ராமநாதபுரம் மாவட்டம் வழுதூர் பகுதியில் ரயில் வரும் நேரத்தில் கேட்டை மூடாமல் அலட்சியமாக இருந்த கேட்கீப்பர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
சென்னையிலிருந்து ராமேஸ்வரம் நோக்கிச் சென்ற சேது விரைவு ரயில் வழுதூர் அருகே வந்துகொண்டு இருந்தது. அப்போது ரயில்வே கேட் மூடப்படாததை அறிந்து கொண்ட ஓட்டுநர் சாமர்த்தியமாக ரயிலை நிறுத்தினார். பின்னர் ரயிலை விட்டு கீழே இறங்கிய அவர் கேட் கீப்பரை நேரில் அழைத்து கேட்டை மூடுமாறு அறிவுறுத்தினார்.
இது குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது பதிலளித்த கேட் கீப்பர் முறையான தகவல் பரிமாற்றம் இல்லை என தெரிவித்தார். தினசரி இதே பகுதியை இந்த ரயில் கடக்கும் நிலையில் அலட்சியமாக செயல்பட்ட கேட் கீப்பர் ஜெயசிங்கை ரயில்வே அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.