திமுக ஆட்சியில் அமைச்சர் வீடுகளிலேயே அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவது வருந்தத்தக்கது என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் துவரிமான் பகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தவறு செய்யாவிட்டால் அமலாக்கத்துறை சோதனைக்கு ஏன் பயப்பட வேண்டும் என கேள்வி எழுப்பினார்.
திக்கு தெரியாத காட்டில் சிக்கியது போல திருமாவளவன் திமுகவில் சிக்கிவிட்டார் என்றும், திமுக கூட்டணியில் இணைந்த பிறகு திருமாவளவன் பேச்சு முன்னுக்கு பின் முரணாக உள்ளது என்றும் தெரிவித்தார்.
எத்தனை நடிகர்கள் கட்சி தொடங்கினாலும் அதிமுகவுக்கு பாதிப்பில்லை என்றும், நடிகர்களின் அரசியல் வரவால் அதிமுகவுக்கு பாதிப்பில்லை என்றும் அவர் கூறினார்.