அமெரிக்க முதல் பெண்மணியும், டிரம்பின் மனைவியுமான மெலனியா டிரம்ப், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் ஆங்கரேஜ் நகரில் அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷிய அதிபர் புதின் சனிக்கிழமையன்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தனது மனைவி மெலனியா எழுதிய கடிதத்தை டிரம்ப், புதினிடம் கொடுத்தார்
அதில் உக்ரைனில் போரால் பாதிக்கப்படும் குழந்தைகளைப் பற்றி பரிசீலிக்குமாறு மெலனியா கேட்டுக் கொண்டுள்ளார்.