விடுமுறை முடிந்து ஒரே நேரத்தில் சென்னை திரும்பிய தென்மாவட்ட மக்களால் உளுந்தூர் பேட்டை சுங்கச் சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சென்னையில் தங்கி உள்ள தென் மாவட்ட மக்கள் 3 நாட்கள் தொடர் விடுமுறையை ஒட்டி சொந்த ஊர் சென்றிருந்தனர். தொடர்ந்து அவர்கள் விடுமுறையை முடித்து விட்டு, கார் மற்றும் பேருந்துகளில் சென்னை திரும்பினர்.
ஒரே நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த மக்களால் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டை சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
திருச்சி, சென்னை ஜிஎஸ்டி சாலையில் இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நின்ற வாகனங்களால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.