திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆவணி திருவிழாவின் 4-வது நாளில் சுவாமி குமரவிடங்க பெருமான் யானை வாகனத்திலும், வள்ளி அம்மாள் சரப வாகனத்திலும் எழுந்தருளி அருள்பாலித்தனர்.
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. இந்நிலையில் 4-ம் திருநாளான நேற்றிரவு வெள்ளி யானை வாகனத்தில் சுவாமி குமரவிடங்க பெருமானும், வெள்ளி சரப வாகனத்தில் வள்ளியும் எழுந்தருளினர்.
தொடர்ந்து மேள தாளம் முழங்க உள்மாட வீதி நான்கிலும், ரதவீதி நான்கிலும் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.