உக்ரைன் அதிபர் ஜென்ஸ்கி உடனான பேச்சுவார்த்தையில் ரஷ்யாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை அதிபர் டிரம்ப் எடுக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் அலாஸ்கா நகரில் நடந்த பேச்சுவார்த்தையில் உக்ரைனுக்குப் பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்க ரஷ்ய அதிபர் ஒப்புக் கொண்டதாக டிரம்ப்பின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காப் கூறினார்.
இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடன் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ள நிலையில், ரஷ்யாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை ட்ரம்ப் எடுக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது, நேட்டோ உறுப்பினராகச் சேர வேண்டாம் என ஜெலன்ஸ்கியுடன் அதிபர் டிரம்ப் வலியுறுத்த உள்ளதாகவும், கிரிமியாவை மீட்டெடுப்பதற்கான உக்ரைனின் சாத்தியக்கூறுகளையும் அதிபர் டிரம்ப் நிராகரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
உக்ரைனுக்குப் பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்க ரஷ்ய அதிபர் புதின் தயாராக இருந்த நிலையில், அதிபர் டிரம்ப்பின் மாறுபட்ட கருத்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யா உடனான ஒப்பந்தத்திற்காகவே அதிபர் டிரம்ப் மாறுபட்ட முடிவை எடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.