நீலகிரி மாவட்டம் மாயார் மின்வாரிய குடியிருப்பு பகுதிக்குள் பகல் நேரத்தில் உலா வந்த கரடியால் அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் அச்சமடைந்தனர்.
முதுமலை புலிகள் காப்பக வளிமண்டலத்திற்கு உட்பட்ட மாயார் மின்வாரிய குடியிருப்பு பகுதிக்குள் கரடி ஒன்று உலா வந்தது. அப்போது வெளியே விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் கரடியைக் கண்டவுடன் அச்சத்துடன் வீட்டிற்குள் ஓடினர்.
அண்மையில் கோவை மாவட்டம் வால்பாறை அருகே கரடி தாக்கியதில் வடமாநில தொழிலாளரின் 7 வயது மகன் உயிரிழந்த நிலையில், நீலகிரி மாவட்டம் மாயார் மின்வாரிய குடியிருப்பு பகுதியில் கரடி ஒன்று உலா வந்துள்ளது.
தொடர்ந்து பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாகச் சுற்றித் திரியும் கரடியை வனத்துறையினர் கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.