ஆம்பூர் அருகே மழை காரணமாகச் சலவை தொழிலாளியின் வீடு இடிந்து விழுந்தது.
திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வ கணேஷ். சலவைத் தொழிலாளியான இவர், குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார்.
அப்போது பெய்த கனமழை காரணமாக வீடு இடிந்து விழுந்து பொருட்கள் அனைத்தும் சேதமடைந்தன. இதனால் தங்குவதற்கு மாற்று இடம் இல்லாமல் செல்வகணேஷின் குடும்பத்தினர் தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொண்டு புதிய வீடு கட்டித் தர வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.