ஃபஹத் பாசில் – வடிவேலு ஆகியோர் இணைந்து நடித்துள்ள மாரீசன் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சஸ்பென்ஸ் திரில்லராக உருவான மாரீசன் திரைப்படத்தை சுதீஷ் சங்கர் இயக்கியிருந்தார். வடிவேலுவின் நடிப்புடன் முதல் பாதி சிறப்பாக இருந்தாலும், இரண்டாம் பாதி சிறிய ஏமாற்றத்தைக் கொடுத்ததால் படத்தின் வெற்றி விகிதம் குறைந்து விட்டதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.
கலவையான விமர்சனங்களைப் பெற்ற இப்படம் இதுவரை 8 கோடி ரூபாய் வரை வசூலித்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இப்படம் வரும் 22-ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.