ஜம்மு காஷ்மீரில் இன்று ஏற்பட்ட மேக வெடிப்பில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் காயம் அடைந்தனர்.
ஜம்மு காஷ்மீரின் கிஷ்துவார் மாவட்டத்தில் உள்ள சிசோட்டி கிராமத்தில், கடந்த 14ல் திடீர் மேகவெடிப்பால் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சோகம் மறைவதற்குள் மற்றொரு மேக வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.
“பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும்” என்ற பழமொழிக்கு ஏற்ப, ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் உள்ள தொலைதூர கிராமத்தில் மேக வெடிப்பு ஏற்பட்டது.
இதனால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்த நிலையில், 6 பேர் படுகாயமடைந்தனர். பலர் மாயமாகியுள்ள நிலையில் நிகழ்விடத்தில் மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.