மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் அருகே இருசக்கர வாகனம் உரசியதால் நிலை தடுமாறிய சிறுவன் சாலையின் நடுவே விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தரங்கம்பாடி செல்லும் இந்த சாலையில் 10 வயது சிறுவன் சாலையைக் கடக்க முயன்ற போது இருசக்கரம் ஒன்று உரசியபடி சென்றது. இதனால் நிலைதடுமாறிய சிறுவன் சாலையின் நடுவே விழுந்தார்.
அப்போது வாகனங்கள் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்ட நிலையில் இந்த இடத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.