உக்ரைன் – ரஷ்யா போரை நிறுத்த வலியுறுத்தி ரஷ்ய அதிபர் புதினுக்கு, அமெரிக்காவின் முதல் பெண்மணி மெலனியா அளித்திருந்த கடிதத்திற்கு, டான்பாசை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் பதிலளித்துள்ளார்.
முன்னதாக, குழந்தைகள் நலனில் அக்கறை கொண்டு போரை நிறுத்த புதின் முன்வர வேண்டும் என மெலனியா கடிதத்தில் தெரிவித்திருந்தார்.
இதற்குப் பதிலளித்த மாணவி, உக்ரைன் ராணுவ தாக்குதலால் கடந்த 11 ஆண்டுகளாக தாங்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும், முதலில் ஜெலன்ஸ்கிக்கு நீங்கள் கடிதம் அனுப்புங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.