அரசு அலுவலகங்களை E-OFFICE-ஆக மாற்றியதை போல மந்திரி சபையை E CABINET-ஆக மாற்றியிருக்கிறார் திரிபுரா மாநில பா.ஜ.க. முதலமைச்சர் மாணிக் சாஹா. அதுகுறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.
தொழில்நுட்ப வளர்ச்சிக்கு முன்பு அரசு அலுவலகங்கள் எப்படி இயங்கிக் கொண்டிருந்தன என்பது கடந்த தலைமுறைக்குத் தெரியும். கட்டுக்கட்டாக கோப்புகள்… மேசைக்கு மேசை FILE-கள்… என எல்லாவற்றையும் தாண்டி ஒரு காரியத்தைச் செய்து முடிப்பதற்குள் போதும்போதும் என்றாகிவிடும். அதிலும் பழைய RECORDS-ஐ தேடிக்கண்டுபிடிப்பது மிகவும் கடினம். ஆனால் டிஜிட்டல் புரட்சிக்குப் பிறகு உலகமே உள்ளங்கைக்குள் வந்துவிட்டது.
நாளுக்குநாள் மேம்பட்டு வரும் தொழில்நுட்பத்தை நாம் எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதில்தான் வெற்றியின் ரகசியம் அடங்கியிருக்கிறது. அந்த வகையில் அரசு அலுவலகங்களை மின்னணு மயமாக்கி மற்ற மாநிலங்களுக்கு உதாரணமாக விளங்குகிறது திரிபுரா.
அங்கு 2023-ஆம் ஆண்டு முதல் E-OFFICE திட்டம் நடைமுறையில் இருக்கிறது. இதன்மூலம் தேவையற்ற கால விரயம் தவிர்க்கப்படுவதோடு வெளிப்படைத்தன்மையும் உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் ஆவணங்களைக் காணவில்லை என்று கூறி மக்களை அலைக்கழிக்கும் அதிகாரிகளும் காணாமல் போய்விட்டார்கள்.
அதாவது தங்களது பணியைச் சரிவரச் செய்யாமல் ஏமாற்றிய அலுவலர்கள் வாங்கும் சம்பளத்துக்கு ஒழுங்காக வேலை செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரகம் தொடங்கி கிராம பஞ்சாயத்து வரை ஏராளமான அலுவலகங்கள் டிஜிட்டல் சங்கிலியால் இணைக்கப்பட்டுள்ளன.
ஒரு கோடியே 40 லட்சம் பக்கங்களைக் கொண்ட ஒரு லட்சம் ஆவணங்களை ஸ்கேன் செய்து மின்மயமாக்கி மலைக்க வைக்கிறது திரிபுரா. எஞ்சியிருக்கும் லட்சக்கணக்கான ஆவணங்களை E FILE-ஆக மாற்றும் பெரும் பணி நடைபெற்று வருகிறது.
அரசு அலுவலகங்களை E-OFFICE-ஆக மாற்றியதை போல மந்திரி சபையை E CABINET-ஆக மாற்றியிருக்கிறார் பா.ஜ.க. முதலமைச்சர் மாணிக் சாஹா. அமைச்சரவை கூட்டம், ஆலோசனைக் கூட்டம் உள்ளிட்டவற்றைக் காகிதமே இல்லாமல் ONLINE-ல் நடத்துகிறார். இணையப் பாதுகாப்பை உறுதி செய்து E GOVERMENT RACE-ல் முந்திக் கொண்டிருக்கிறது திரிபுரா.