நாகர்கோவில் கூட்டுறவு இணை பதிவாளர் அலுவலகத்துக்குள் நுழைந்து தகராறு செய்த வழக்கில், அமைச்சர் மனோ தங்கராஜ் உட்பட 11 பேர் நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற கூட்டுறவு சங்கங்களின் தேர்தலை ரத்து செய்ய வலியுறுத்தி, நாகர்கோவில் கூட்டுறவு இணை பதிவாளர் அலுவலகத்தில் போராட்டம் நடைபெற்றது.
அப்போது எம்.எல்.ஏ-வாக இருந்த மனோ தங்கராஜ் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், 12 பேர் மீது காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது.
இதுதொடர்பாக நாகர்கோவில் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில், இன்று மீண்டும் வழக்கானது விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் மனோதங்கராஜ் உட்பட 11 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். இதையடுத்து வழக்கு விசாரணை அடுத்த மாதம் 8ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.