இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கூரியர் மேன் ஒருவரின் செயலை பாராட்டி வீடியோ ஒன்றை ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் வெளியிட்டுள்ளார்.
குயின்ஸ்லாந்தில் வசிக்கும் வெரிட்டி வாண்டல் என்பவருக்கு வந்த பார்சலை வழங்குவதற்காக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கூரியர் மேன் ஒருவர் சென்றுள்ளார். அப்போது, மழை பெய்யத் தொடங்குவதைக் கவனித்த அந்த நபர், முற்றத்தில் உலர்த்த வைக்கப்பட்டிருந்த படுக்கை விரிப்புகளை மழையில் நனையாமல் பாதுகாப்பாக எடுத்து வைத்தார்.
இதுதொடர்பான காட்சிகள் அனைத்தும் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி-ல் பதிவாகியிருந்தது. அதன் காட்சிகளை கண்டு வியப்பில் ஆழ்ந்த ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண்மணி, வலைதளங்களில் பதிவிட்டு, கூரியர் மேனை பாராட்டியுள்ளார். அந்த வீடியோவை நடிகை பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட லட்சக்கணக்கான பேர் லைக் செய்தும் பாராட்டியுள்ளனர்.