ஜெலன்ஸ்கி மற்றும் ஐரோப்பிய தலைவர்களுடன் நடந்த சந்திப்பு குறித்து புதினிடம் எடுத்துரைத்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக டரூத் சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், வாஷிங்டனில் நடந்த கூட்டத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன், பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப், இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி உள்ளிட்டோர் கலந்து கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.
உக்ரைனுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்கள் குறித்து விவாதித்ததாகவும், இருநாடுகளுக்கு இடையே அமைதி ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளால் ஐரோப்பியத் தலைவர்கள் மகிழ்ச்சியடைந்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும், ஜெலன்ஸ்கி மற்றும் ஐரோப்பியத் தலைவர்களுடன் நடந்த சந்திப்பு குறித்து புதினிடம் எடுத்துரைத்ததாகவும் குறிப்பிட்டுள்ள டிரம்ப், ரஷ்யா-உக்ரைன் போர் உடனடியாக முடிவுக்கு வரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.